மாட்டு வண்டிகள் மீது தண்ணீர் லாரி மோதல்: 4 பேர் பலி- 2 மாடுகளும் சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே மாட்டு வண்டிகள் மீது படுவேகத்தில் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சிறுவன், சிறுமிஉள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 மாடுகளும் பலியாயின. சுமார் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சென்னை புறநகரான புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்குச்சென்றனர். 3 மாட்டு வண்டிகளில் சென்ற இவர்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை, நந்தம்பாக்கம் அருகே அவர்களது மாட்டு வண்டிகள் வந்தன. அப்போது அதி வேகமாக வந்தஒரு தண்ணீர் லாரி, மாட்டு வண்டிகள் மீது மோதியது.

இதில் ஒரு சிறுவன், சிறுமி, வயதான பெண்மணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 7 பெண்கள் உள்பட17 பேர் படுகாயமடைந்தனர். இரண்டு மாடுகளும் பலியாயின. அனைவரும் போரூர் ராமச்சந்திராமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

மேலும் இரு மாடுகளும் படுகாயமடைந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+