இமாம் அலியின் கூட்டாளிகள் கைது
தஞ்சாவூர்:
தமிழக போலீசாரால் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-உம்மாவைச் சேர்ந்த இமாம் அலியின் 2கூட்டாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சையில் நேற்று இவர்கள் பிடிபட்டனர். திருச்சிற்றம்பலம் காவல் நிலைய போலீஸார் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, பெட்ரோல் பங்க் ஒன்றின் உரிமையாளருடன், இரு வாலிபர்கள் தகராறு செய்துகொண்டிருந்ததைப் பார்த்தனர்.
உடனடியாக விரைந்து சென்று விசாரித்தபோது, அவர்களது பெயர்கள் ஷாஜகான் (தூத்துக்குடி), சுல்தான்(தொண்டி) என்று தெரிவித்தனர். எதற்காக இங்கு வந்துள்ளீர்கள் என்று கேட்டபோது, இருவரும் மழுப்பலானபதில்களைக் கூறினர்.
இதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த போலீஸார் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்று விசாரித்தபோதுதான், இருவரும் இமாம் அலியின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது.
மதுரை திருமங்கலத்திலிருந்து இமாம் அலியும், ஹைதர் அலியும் தப்பியபோது, இவர்கள் தான் தங்குதவற்கு இடம்கொடுத்து அவர்களுக்கு உதவியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கிக் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications