கென்யா நாட்டு மாணவர் மதுரையில் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
குடிபோதையில் மதுரை பெட்ரோல் பங்கில் தகராறு செய்த கென்ய நாட்டு மாணவர் கைதுசெய்யப்பட்டார்.
கென்யாவைச் சேர்ந்த பெஞ்சமின் பிராங்க்ளின், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், எம்.பி.எம். படித்துவருகிறார். ஆத்திகுளம் பகுதியில் தங்கியுள்ளார்.
இரவில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்குக்கு வந்தார். பெட்ரோல் நிரப்புவது தொடர்பாகஅவருக்கும் பங்க் ஊழியர்கள் மற்றும் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து பங்க் உரிமையாளர் ஊமச்சி குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விரைந்து வந்தபோலீஸார் பெஞ்சமினைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications