மெரீனாவில் நள்ளிரவு இடிப்பு தொடர்கிறது: மேலும் 2 கட்டடங்கள் "டமால்"!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Demolision of pukari hotel

மெரீனா கடற்கரையில் நேற்றிரவு இடிக்கப்பட்ட புகாரி ஹோட்டல்
(படம் நன்றி- தினகரன்)
மெரீனா கடற்கரையில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்படுவது தொடர்கிறது. முதலில் சீரணி அரங்கம்இடிக்கப்பட்டது. இந் நிலையில் நேற்று மேலும் 2 கட்டடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இப்போதுமெரீனா நீச்சல் குளமும் மூடப்படவுள்ளது.

அண்ணா நீச்சல்குளம் வளாகத்தில் உள்ள பழைய கட்டடம் நேற்றிரவு இடித்துத் தள்ளப்பட்டது. அங்குள்ள உடைமாற்றும் அறை உள்ளிட்ட சில அறைகளும் இடிக்கப்பட்டன.

அதேபோல, மாநிலக் கல்லூரிக்கு எதிரே இருந்த பழைய புகாரி ஹோட்டல் கட்டடமும் இடித்துத் தள்ளப்பட்டது.பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இவை இரண்டும் இரவோடு இரவாக இடிக்கப்பட்டன.

இது குறித்து மாநகராட்சி துணை ஆணையர் அபூர்வா கூறுகையில், இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. மெரீனாகடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் இவை இடிக்கப்பட்டன.

இந்த இரண்டு கட்டடங்களும் பாழடைந்த நிலையில் இருந்தன. எனவே அவற்றை இடித்துத் தள்ளி விட்டோம்.இரண்டுமே மாநிநராட்சிக்குச் சொந்தமான கட்டடங்கள். இரவில் இடித்துத் தள்ளியதற்கு விசேஷ காரணம் எதுவும்இல்லை.

பகலில் இந்தப் பணிகள் நடந்தால் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும், எனவேதான் இரவில் இடிக்கிறோம்என்றார் அவர்.

நீச்சல்குளம் மூடல்?:

இந் நிலையில் மெரீனாவில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தை மூடி விடவும் சென்னை மாநகராட்சி முடிவுசெய்துள்ளது. விரைவில் அதுவும் இடிக்கப்படலாம்.

மேலும் கடற்கரையில் உள்ள மீன் காட்சியகம், கிளை நூலகம் ஆகியவற்றையும் இடமாற்றம் செய்ய அரசுமுடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இது தவிர கடற்கரையில் இனி மேல் சுண்டல், பாப்கார்ன், மாலை, பஞ்சி, மீன் உள்ளிட்டவற்றை விற்கும் சிறுவியாபாரிகளின் கடைகளுக்கும் அனுமதி ரத்தாகலாம் என்றும் கூறப்படுகிறது.

மெரீனா கடற்கரையில் தொடர்ந்து பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருவது சென்னை மக்களிடையேபல்வேறு கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+