புலமைப்பித்தனுக்கு கல்தா: பொன்னையனுக்கு புது பதவி
சென்னை:
இன்று நடந்த அதிமுகவின் செயற் குழுக் கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவராக நிதியமைச்சர் பொன்னையன நியமிக்கப்பட்டார்.
இதுவரை இந்தப் பதவியில் இருந்த புலமைப்பித்தனுக்கு முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கல்தாகொடுத்துள்ளார்.
ஏற்கனவே இருமுறை ஒத்தி வைக்கப்பட்டுவிட்ட இந்த செயற் குழுக் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ளஅதிமுகவின் தலைமையகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கியது.
கூட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார்.
இதில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டதால், அனைவரும்நேற்றே சென்னையில் கூடிவிட்டனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், இப்போது மத்திய அரசுக்குஎதிராக காங்கிரஸ் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளதால் அது குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கட்சியில் சரிவர செயல்படாத நிர்வாகிகளுக்கு இக் கூட்டத்தில் ஜெயலலிதா கடும் டோஸ் விட்டதாகத் தெரிகிறது. அதிமுகஅவைத் தலைவர் புலமைப்பித்தன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நிதியமைச்சர் பொன்னையன் அவைத் தலைவராக்கப்பட்டுள்ளார்.
உடல் நலக் குறைவு காரணமாக தனது பதவியை விட்டு புலமைப்பித்தன் விலகிவிட்டதாக அதிமுக தெரிவித்துள்ளது.
அடுத்த சில தினங்களில் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications