தஞ்சை பகுதியில் எலிக்கறி உண்பது வழக்கம் தான்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தஞ்சாவூர் பகுதிகளில் விவசாயிகள் எலிக் கறி சாப்பிடுவது வழக்கமானது தான் என உச்ச நீதிமன்றத்திடம் தமிழகஅரசு தெரிவித்துள்ளது.

காவிரி டெல்டாவில் சம்பா மற்றும் குறுவை சாகுபடிகள் பொய்த்துப் போனதால் இந்தப் பகுதி விவசாயக் கூலிகள்பசியால் வாடினர். இதனால் அவர்கள் எலிகளைப் பிடித்துத் தின்றனர். இந்த எலிக்கறி சாப்பிடும் அவலம் குறித்துதேசிய அளவில் விவாதிக்கப்பட்டது.

அப்போது தஞ்சையில் யாரும் எலிக்கறி சாப்பிடவில்லை என அம் மாவட்ட நிர்வாகம் கூறியது.

இந் நிலையில் தமிழகத்தில் ஏழை விவசாயிகள் பசி மற்றும் பட்டினி காரணமாக எலிக்கறி சாப்பிடும் நிலைக்குத்தள்ளப்பட்டதாகக் கூறி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல்செய்தார்.

இந்த வழக்கை தலைைம நீதிபதி காரே, நீதிபதி சின்ஹா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்துவருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,

தஞ்சாவூர் பகுதியில் எலிக்கறி சாப்பிடுவது வழக்கமான ஒன்று தான். பசி, பட்டினியால் அதை மக்கள்சாப்பிடவில்லை. இதை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரே தெளிவுபடுத்திவிட்டார்.

காவிரியில் இருந்து வரும் நீரை தங்களது நிலங்களில் பாய்ச்சும் முன், நிலங்களில் வாழும் எலிகளை விவசாயிகள்முதலில் விரட்டுவது வழக்கம். இந்தப் பணியில் எலி பிடிக்கும் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். அப்போதுபெரிய எலிகளை இந்தத் தொழிலாளர்கள் பிடித்துச் சென்று தோலை நீக்கிவிட்டு சுட்டு உண்பது வழக்கமானது.

மழைக் காலத்திலும், கோடை காலத்திலும் இந்தப் பகுதிகளில் எலி தின்னும் பழக்கம் அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் பட்டினிச் சாவே நடக்கவில்லை. பசி காரணமாக ஏழை விவசாயிகள் எலிக்கறி தின்னும் நிலைக்குத்தள்ளப்பட்டதாகக் கூறுவது முழு தவறு என்று தமிழக அரசு தனது மனுவில் கூறியுள்ளது.

இதையடுத்துப் பேசிய வழக்கறிஞர் அஸ்வினி குமார், தமிழக அரசின் மனுவில் சரியான விளக்கங்கள் இல்லை.ஏழை மக்களுக்கான நலத் திட்டங்கள் தமிழக அரசால் முறையாக அமலாக்கப்பட்டதா என்ற விவரமும் அதில்இல்லை.

இதனால் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு எந்த அளவுக்கு உதவிகள் போய்ச் சேருகின்றனஎன்பதை அந்த மாநில அரசு விளக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.

இதையடுத்து இந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+