சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கிடந்த கிரனைட் குண்டு: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கிரனைட் குண்டு ( live hand grenade) கிடந்தது. அந்த குண்டுகண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இதனால் சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்றிரவு பெரும்பரபரப்பு நிலவியது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை பார்த்து வருபவர் ரஜினி. நேற்றிரவு 7.30மணியளவில் சிறு நீர் கழிப்பதற்காக, 11-வது பிளாட்பாரத்திற்கு அருகே சென்றுள்ளார்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்க குப்பைத் தொட்டியில், சிவப்பு நிறத்தில் ஒரு பார்சல் கிடந்ததைத்ப் பார்த்துஅருகில் சென்றார். அப்போது அதனுள் இருந்தது வெடிபொருளாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படவேஉடனேக ரயில்வே போலீஸ் மற்றும் ரயில் நிலைய உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தந்தார்.
உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், விரைந்து வந்து பார்த்தனர். அது ஒரு லைவ் கிரனைட்குண்டு என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது.வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் போலீஸ் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ரயில் நிலையம் முழுவதும் பரவியது. இதனால் பயணிகள்மத்தியில் பீதி ஏற்பட்டது. பெரும்பாலானவர்கள் ரயில் நிலையத்தை விட்டு வெளியே ஓடினர். இதனால் அங்குபதற்றமும் பரபரப்பும் நிலவியது.
இந் நிலையில் சம்பவ இடத்துக்கு வந்துவிட்ட தமிழக வெடிகுண்டு செயலிழக்கும் படையைச் சேர்ந்தசப்-இன்ஸ்பெக்டர் சத்யசீலன், கவச உடையுடன் வெடிகுண்டு இருந்த குப்பைத் தொட்டியருகே சென்றார்.
ராணுவத்திற்கு சொந்தமான குண்டு:
பின்னர் மிகுந்த ஜாக்கிரதையாக அதை கையில் எடுத்தார். அது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கையெறி குண்டுஎன்று தெரியவந்தது. மேலும் அது வெடிக்கக் கூடிய நிலையிலும் இருந்ததைக் கண்டுபிடித்தார்.
இதையடுத்து அதை மிக லாவகமாகக் கையாண்டு வேனுக்குக் கொண்டு சென்றார். இதையடுத்து அதன் மீது மணல்மூட்டைகள் அடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த வேன் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள வெடிகுண்டுசெயலிழக்கச் செய்யும் போலீஸ் படையின் தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு வைத்து அந்த குண்டு செயலிழக்கப்பட்டது.
ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கையெறி குண்டு இங்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. இதுவெடித்திருந்தால் பெரும் நாசம் ஏற்பட்டிருக்கும் என்று ரயில்வே போலீஸார் கூறுகிறார்கள்.
கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரயில் நிலையம் முழுவதிலும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டது, வேறு குண்டுகள் எதுவும் இருக்கிறதா என்று சோதனையும் நடத்தப்பட்டது. பயணிகளின்உடமைகளும் சோதனையிடப்பட்டன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications