கடலுக்குள் சென்ற 65 தமிழக மீனவர்கள் மாயம்: இலங்கை கைவரிசை
நாகப்பட்டனம்:
நாகப்பட்டனம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 65 மீனவர்களைக் காணவில்லை. அவர்களை இலங்கைகடற்படையினர் பிடித்துச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நாகை துறைமுகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு இந்த மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். நேற்று காலைஅவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை வரவில்லை.
சமீபத்தில் தான் 25க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம், நாகை மீனவர்களைக் கடத்திச் சென்றனர் இலங்கை மீனவர்கள்.பின்னர் இந்தியக் கடற்படையின் தலையீட்டால் சில நாட்களுக்கு முன்னர் தான் விடுவிக்கப்பட்டனர்.
இந் நிலையில் 65 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையோ அல்லது அந் நாட்டு மீனவர்களோ பிடித்துச்சென்றுள்ளனர். அவர்களது 15 படகுகளையும் கொண்டு சென்று விட்டனர். இதனால் நாகை பகுதியில்பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மீனவர்கள் போராட்டம்:
கடத்தப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்கக் கோரி நாகையில் இன்று மீனவர்கள் சாலை மறியல் மற்றும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை முதல் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் மீனவர்கள் கூடி போராட்டம் நடத்தினர். பின்னர் பஸ் நிலையப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து உயர் அதிகாரிகள் விரைந்து வந்து மீனவர்களை சமாதானப்படுத்திபோராட்டத்தைக் கைவிடச் செய்தனர்.












Click it and Unblock the Notifications