ஊழியர்கள் மீதான வழக்கு: நீதிபதிகள் குழுவுக்கு அலுவலகம் ஒதுக்கீடு
சென்னை:
வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று எஸ்மா சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 6,072 அரசுஊழியர்கள், ஆசிரியர்களின் வழக்குகளை விசாரிக்கவுள்ள 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவுக்குஅலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்திலிருந்து விசாரணை தொடங்கலாம் என்று தெரிகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளான சம்பத்,தங்கவேலு, மலை சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நீதிபதிக்கும் நான்கு ஊழியர்கள் (நீதிமன்ற அதிகாரி, தனி உதவியாளர், கார் டிரைவர், அலுவலகஉதவியாளர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தலா ஒரு காரும் தரப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அடுத்த வாரத்திலிருந்து விசாரணை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை தவிர மதுரை, கோவைக்கும் இந்த நீதிபதிகள் குழு சென்று விசாரணை நடத்தவுள்ளது. ஒவ்வொருநீதிபதியும் தலா 2,234 ஊழியர்களிடம் விசாரணை நடத்துவார்கள். ஒரு மாதத்தில் விசாரணையை இவர்கள் நடத்திமுடித்து அறிக்கை தர வேண்டும்.
இதற்கு இவர்களுக்கு ஊதியமாக ரூ. 50.000 தரப்படும்.
அலுவலகத்தை மாற்ற நீதிபதிகள் கோரிக்கை:
இதற்கிடையே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழக்கு விசாரணை தொடர்பாக, 3 நீதிபதிகளும் இன்று தங்களுக்குஒதுக்கப்பட்ட அலுவலகத்துக்கு வந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர் மாநில அரசின் நிர்வாக சீர்திருத்துத் துறைச் செயலாளர் மெய்கண்டதேவனுடன் நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, அடையாறு ஆற்றோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் குடியிருப்புகளில் 3 பங்களாக்களை விசாரணைநீதிமன்றங்களாக மாற்றித் தருமாறு நீதிபதிகள் கோரிக்கை விடுத்தனர்.
இப்போது ஒதுக்கப்பட்டுள்ள கிரீன்வேஸ் சாலை இல்லத்தில், இட வசதி போதாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications