மெரீனா தொடர்பான ஸ்டாலின் வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மெரீனா கடற்கரையில் உள்ள கட்டடங்களை இடிப்பதை தடை செய்யக் கோரி திமுக துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கம் மற்றும் சில கட்டடங்களை சென்னை மாநகராட்சிஇரவோடு இரவாக இடித்தது. இந் நிலையில் தலைவர்களின் சமாதிகள் உள்ளிட்ட மேலும் சில கட்டடங்களையும்இடிக்கப் போவதாகவும் தகவல் பரவியுள்ளது.

இந் நிலயில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். அதில், மெரீனா கடற்கரையில் இருக்கும் தனி கட்டடங்களை இடிக்கத் தடை விதிக்க வேண்டும்.அப்படியே இடிப்பதாக இருந்தாலும், அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று கோயிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி ஏ.கே.ராஜன் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச் ஸ்டாலினுக்கு சில கேள்விகளை எழுப்பியது.

கடற்கரையில் இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை இடிப்பதில் என்ன தவறு, பொது மக்கள் நலன் கருதியேஇந்த நடவடிக்கையை அரசு எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இதில் எப்படி குறை சொல்ல காண முடியும்?.கடற்கரையில் உட்காரக் கூட இடமில்லாத அளவுக்கு அசுத்தமாக உள்ளது. அதை அரசு சுத்தப்படுத்த நடவடிக்கைஎடுத்திருப்பது பாராட்டுக்குரியது தானே என நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறினார்.

அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிர் என்.ஆர்.சந்திரன், தவறான தகவலின் அடிப்படையிலேயே இந்தமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடிந்து, சிதிலமடைந்த நிலையில் இருந்த கட்டடங்கள்தான் இடிக்கப்பட்டுள்ளது.எனவே இதுபோன்ற தவறான மனுக்களை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் புதிய வழி முறையை வகுக்கவேண்டும். இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

ஆனால், அவரை இடைமறித்த நீதிபதிகள், மனுதரார் ஸ்டாலின் ஒரு முன்னாள் மேயர். வழக்குத் தொடர அவருக்குமுழு உரிமை உண்டு என்றனர்.

இதையடுத்துப் பேசிய ஸ்டாலினின் வழக்கறிஞர் விடுதலை, இப்போது அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதிகளைஇடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

இதை அரசு வழக்கறிஞர் சந்திரன் மறுத்தார். இந்த சமாதிகளையும் இடிக்க மாட்டோம் என நீதிமன்றத்துக்கு நான்உறுதிமொழி தருகிறேன் என்றார்.

இதையடுத்து ஸ்டாலின் மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள்உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை அடுத்த வியாழக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+