திருட்டு விசிடி வழக்கு: அழகிரி மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்
மதுரை:
அனுமதி பெறாத விசிடிக்களை கடையில் வைத்திருந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் அழகிரிஉள்ளிட்ட 2 பேர் மீது மதுரை நீதிமன்றத்தில் போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அழகிரியின் வீடியோகடையில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அனுமதி பெறாமல் 4,037 விசிடிக்களைகடையில் பதுக்கி வைத்திருந்ததாக கூறி இன்னொரு வழக்கையும் போலீஸார் சுமத்தினர்.
இந்த வழக்கில் மதுரை 5-வது நீதிமன்றத்தில் நீதிபதி இந்திராணி முன்னிலையில் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 128 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையுடன், 16சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் அழகிரி முதல் குற்றவாளியாகவும், கடை ஊழியர் தாமோதரன் 2-வது குற்றவாளியாகவும்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கிலும், தா.கி கொலை வழக்கிலும் அழகிரி ஜாமீனில் விடுதலையாகி பெங்களூரில்தங்கியுள்ளார். அவரை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர். பாலு இன்று பெங்களூரில்சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications