96 சென்னை மீனவர்களை கடத்தினர் ஆந்திர மீனவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 96 மீனவர்களை, ஆந்திர மாநில மீனவர்கள் கடத்திச் சென்றுபணம் கொடுத்தால்தான் விடுவோம் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

சென்னை காசிமேடு பகுதியிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை அடிக்கடிஆந்திர மாநில மீனவர்கள் தாக்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பல சமயங்களில் கடத்திவைத்து பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.

அப்படிப்பட்ட நேரங்களில காசிமேடு பகுதி மீனவர்கள் அரசு மற்றும் போலீசின் உதவியைநாடாமல் பணம் கொடுத்து மீனவர்களை மீட்டு வருகின்றனர். இந்த விவரமே வெளியில்வருவதில்லை.

இந் நிலையில், கடந்த 20ம் தேதி 6 விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 30 மீனவர்களை ஆந்திரமாநிலம் ஓங்கோல் மாவட்டம் சென்னார்பாளைய மீனவர்கள் பிடித்துச் சென்றுள்ளனர். இதைகாசிமேடு மீனவர்கள் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை.

அதே போல 22ம் தேதி கடலுக்குள் சென்ற 66 மீனவர்களையும் ஆந்திர மீனவர்கள் பிடித்துச்சென்றுள்ளனர்.

இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட விசைப் படகு மீனவர்கள் சங்கம்ஆந்திராவுக்கு விரைந்து சென்று மீனவர்களை மீட்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மீனவர்கள் தரப்பிலிருந்து புகார் வராததால் அரசு இதுவரை இதில் தலையிடவில்லை என போலீசார்கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+