இலங்கை வாலிபர் கைது: ரூ. 6 கோடி ஹெராயின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வேளச்ரிேசயில் ரூ. 6.2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை கடத்தியதாக இலங்கையைச்சேர்ந்தவர் பிடிபட்டார்.
வேளச்சேரி பஸ் நிலையத்தில் சூட்கேஸுடன் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைபோலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார்.
இதைத் தொடர்ந்து அவரது சூட்கேஸை சோதனை செய்து பார்த்தபோது அதில் ஹெராயின் போதைப் பொருள்இருந்தது. இதையடுத்து அவர் போதைப் பொருள் தடுப்புப் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கையைச் சேர்ந்த கந்தராஜா என்ற ராஜா என்று தெரியவந்தது.அவர் கடத்தி வந்த ஹெராயினின் மதிப்பு ரூ. 6.2 கோடியாகும்.
இவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications