For Daily Alerts
Just In
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது குறைகிறது
சென்னை:
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆகக் குறைக்கப்படவுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை கூடும்அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
ஓய்வு பெறும் வயதைக் குறைப்பது தொடர்பாக நிதியமைச்சர் பொன்னையன் தலைமையில் அமைக்கப்பட்ட 4அதிகாரிகள் குழு தனது அறிக்கையை நேற்றே அரசிடம் தாக்கல் செய்துவிட்டது.
இந்தக் கமிட்டியின் பரிந்துரைகள் மீது முடிவெடுக்க வரும் 29ம் தேதி அமைச்சரவை கூடுகிறது. அதில் இந்தக்கமிட்டி கூறியுள்ள மற்ற யோசனைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.
Comments
Story first published: Saturday, May 24, 2003, 5:30 [IST]