பலியிட தடை: காளி, அய்யனார் கோவில்களை மூடிவிடலாமா? அரசுக்கு சேதுராமன் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆட, கோழிகளைப் பலியிடுவதை தடை செய்தால் காளி, அய்யனார், சுடலைமாடன் போன்ற கிராமதெய்வங்களின் கோவில்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என முவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர்சேதுராமன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை விவரம்:

ஆதிக்க சக்திகளும், மேட்டுக் குடி மக்களும் வேத விற்பன்னர்களையும், கேரள ஜோதிடர்கழையும் வைத்து யாகம்,ஹோமங்கள் வளர்த்து ஹோம குண்டத்தில் விலையுயர்ந்த தங்க, வெள்ளி பொருட்களையும் பட்டுப்புடவைகழைளயும் நெய்யில் முக்கி தீக்கு தரைை வார்த்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்னர்.

ஆனால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களால் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து ஹோமம்வளர்க்க முடியாது. இதனால் தான் ஆடு, கோழிகளை வெட்டி தங்கள் குல தெய்வத்துக்கும், இஷ்டதேவதைகளுக்கும் பலியிட்டு நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.

இது இன்று நேற்றல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளால் தமிழனால் கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கம், வழிபாட்டுமுறை.

ஏழ்மையில் வாடும் குடும்பங்களுக்குள் மனத் தாங்கல், சண்டை சச்சரவுகள் அதிகம். பகைத்துக் கொண்டபங்காளிகளுக்குள், மோதிக் கொண்ட மாமன், மைத்துனர்களுக்குள் பகையை மறைக்கச் செய்வது கோவில்களில்கிடாய் வெட்டிப் பொங்கும் நிகழ்ச்சிகள் தான்.

மேட்டுக் குடியில் பிறந்த முதல்வருக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை. உறவுகளை ஒட்ட வைக்கும்பக்திப்பூர்வமான நிகழ்ச்சிகளுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும். இந்தத் தடையால் சில ஆச்சாரியார்களைத் தவிரவேறு யாருக்கும், நாட்டுக்கும் எந்த நன்மையும் இல்லை.

மக்களின் அடிப்படை பழக்க வழக்கத்தில், நம்பிக்கையில் ஒரு அதிரடி உத்தரவு போட்டு தண்டனைவிதிக்கப்பட்டால் நாட்டில் குழப்பம் தான் மிஞ்சும்.

தமிழகத்தின் லட்சக்கண்ககான கிராமக் கோவில்களில் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்திவருகிறார்கள். அரசின் அதிரடி உத்தரவு காரணமாக ஊர்க் காவல் தெய்வங்களான முனியாண்டி, காளி, சுடலைமாடன், அய்யனார் கோவில்களை இழுத்து பூட்ட வேண்டி வரும்.

இதனால் பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் தான். மற்றவர்கள் அல்ல.

பல நூறு எருமைகளைப் பலியிடுதல், குழந்தைகளை மண்ணில் புதைத்து எடுத்தல் போன்றவற்றை அரசு தடைசெய்ததை மக்கள் வரவேற்றார்கள். ஆனால், இப்போது வாழ்க்கை நெறிமுறைகளையே மாற்றும் வகையில்போடப்பட்ட உத்தரவை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

வேத விற்பன்னர்களின் அருளாசியைப் பெறுவதற்காக இந்த அரசு அசட்டுத்தனமாக அதிரடி உத்தரவுகளைப்பிறப்பித்து ஆபத்தைத் தேடிக் கொள்கிறது. உடனே இந்த உத்தரவை வாபஸ் வாங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சேதுராமனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குருவாயூர் கோவிலில் அமைச்சர்கள்:

இதற்கிடையே குருவாயூர் கோவிலில் யானைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பதை நேரில் அறிந்து வரஅறநிலைத்துறை அமைச்சர் ராமசாமி, வனத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் ஆகியோர் குருவார் சென்றனர்.

அங்கு பண்ணாத்தூர் மற்றும் அகைக்கோட்டா ஆகிய இடங்களில் 60 யானைகள் பராமரிக்கப்படுவதை நேரில்பார்வையிட்டனர்.

தமிழகத்தில் உள்ள 41 கோவில் யானைகளையும் சரியாகப் பராமரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதுகுறிப்பிடத்தக்கது. இதையடுத்தே கேரளாவில் பராமரிப்பு முறையை அறிந்து வர அமைச்சர்கள் அங்கு சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+