முரசொலி மாறன் அப்பல்லோவில் அனுமதி
சென்னை:
அமெரிக்க மருத்துவமனையிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட மத்திய அமைச்சர்முரசொலி மாறன், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட மாறன், விமானநிலையத்திலிருந்து நேராக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குசிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
மாறனுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள், திமுக முக்கியத் தலைவர்கள் விமான நிலையத்திலிருந்துமருத்துவமனைக்குச் சென்றனர். மாறன் உடல் நிலை குறித்து பத்திரிகைகளுக்கு செய்தி எதுவும் தரவேண்டாம் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், தனது மருத்துவர்களுக்கு கண்டிப்பானஉத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.இதனால் மாறன் உடல் நிலை குறித்துக் கருத்துக் கூறடாக்டர்கள் மறுத்து விட்டனர்.
முன்னதாக, மாறன் உடல் நிலை குறித்து விமான நிலையத்திற்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர்ஆற்காடு வீராசாமியிடம் கேட்டபோது, அவர் நலமாக இருக்கிறார். அப்பல்லோமருத்துவமனைக்குத் தற்போது கொண்டு செல்லப்படுகிறார் என்றார்.
கருணாநிதி பேட்டி: முரசொலி மாறன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன்,அவரது தாய் மாமாவும், திமுக தலைவருமான மு.கருணாநிதி அங்கு சென்று மாறனைப் பார்த்தார்.பின்னர் அங்குள்ள மருத்துவர்களிடம் பேசி விட்டு வெளியே வந்தார்.
அங்கு காத்திருந்த செய்தியாளர்கள் மாறன் குறித்துக் கேட்டபோது, அவர் நலமாக இருக்கிறார்.போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சில வசதிகள் இல்லை.
எனவேதான் அப்பல்லோவில் அனுமதித்துள்ளோம் என்றார்.
டெல்லி மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை தரப்படவிலலை என்று புகார்கூறி விட்டு மறுபடியும் அப்பல்லோவில் அனுமதித்துள்ளது குறித்து கருணாநிதியிடம் கேட்டபோது,நான் புகார் கூறியவுடன், மாறனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்த பட்டியலைஅப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் எனக்கு அனுப்பியது. அது எனக்குத் திருப்தியைத் தந்ததால்மீண்டும் சேர்க்க முடிவு செய்தோம் என்றார்.
கருணாநிதியுடன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஏ.ராஜா ஆகியோரும் வந்திருந்தனர். சுமார்கால் மணி நேரம் அங்கு இருந்த கருணாநிதி பின்னர் தனது வீட்டிற்குக் கிளம்பிச் சென்றார்.


