எனது உத்தரவை மீறுவதா? போலீஸுக்கு சுபாஷன் ரெட்டி கண்டனம்
சென்னை:
உத்தரவை மீறி நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள ஒத்தப்பனை சுடலையாண்டவர்கோவிலில் ஆடு, பன்றிகளை வெட்டியவர்களை போலீஸார் தடுத்து கைது செய்ததற்கு சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட விலங்குகளைப் பலியிட தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நான்குநேரி ஒத்தப்பனைசுடலையாண்டவர் கோவிலில் ஆடு, பன்றிகளை வெட்ட அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்விசாரித்தது. அப்போது சுடலையாண்டவர் கோவிலில் ஆடு, பன்றிகள் வெட்டலாம். அதைபோலீஸார் தடுக்கக் கூடாது என்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி வாய் மொழியாகஉத்தரவிட்டார். இருப்பினும் இந்த விழாவின்போது பூசாரியை போலீஸார் வீட்டுக் காவலில்வைத்தனர். ஆடு, பன்றிகளை வெட்ட விடாமல் தடுத்தனர்.
இந்த நிலையில், ஆடுகள், கோழிகள் வெட்ட தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரிஉயர்நீதிமன்றத்தில் தமிழக ஜனதாக் கட்சி சார்பில் பாலசுப்ரமணியம் என்பவர் மனு செய்துள்ளார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நான் வாய் மொழியாக உத்தரவிட்ட பின்னரும், அதைமீறி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
இதுகுறித்து அரசு தலைமை வக்கீல் என்னிடம் விளக்க வேண்டும். பிற்பகல் 2.45 மணிக்கு நேரில்வந்து விளக்கம் தருமாறு கூறி வழக்கு விசாரணையை 2.45 மணிக்குத் தள்ளி வைத்தார் நீதிபதிசுபாஷன் ரெட்டி.


