கண்கலங்கி பேசிய ரவி மோகன்.. முதல்வர் விஜயை சந்தித்த மாமியார்.. விஷயம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஏற்கனவே ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சமீபத்தில் ரவி மோகன் கண்கலங்கியபடி செய்தியாளர்களிடம் பேசியது இந்த சர்ச்சையை இன்னும் பெரிதாக்கியது.

Ravi Mohan Jayam Ravi Aarthi Ravi Sujatha CM Vijay

ரவி மோகன் பேச்சு

அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரவி மோகன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார். "நான் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடன் கஷ்ட நேரத்தில் துணையாக இருந்த ஒருவரையும் என்னிடமிருந்து பிரித்து விட்டார்கள். நான் நிம்மதியாக வாழ கூட விடமாட்டார்கள் போல இருக்கிறது.

என் குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கிறேன். அவர்களுக்கான செலவுகளை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் ஒரு அப்பாவாக அவர்களுடன் இருக்க முடியாத நிலை என்னை உள்ளுக்குள் உடைக்கிறது" என்று அவர் பேசியதாக சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டது.

மேலும், தன்னை ஒரு கட்டத்தில் அடிமைபோல் நடத்தப்பட்டதாகவும், வாழ்க்கையில் சற்றேனும் அமைதி கிடைத்த நேரத்திலும் அதை கூட பறித்துவிட்டார்கள் என்ற வகையிலும் அவர் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Ravi Mohan Jayam Ravi Aarthi Ravi Sujatha CM Vijay

ரசிகர்கள் ஆறுதல்

இதையடுத்து ரசிகர்கள் பலரும் ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கினர். "ஒரு மனிதன் இவ்வளவு உடைந்து வெளியில் வந்து பேசுகிறார் என்றால் அதன் பின்னால் மிகப்பெரிய வலி இருக்கும்" என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் சுஜாதா சந்திப்பு

இந்த சூழ்நிலையில்தான் தற்போது ரவி மோகனின் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த சந்திப்பு திரைப்படம் அல்லது தனிப்பட்ட மரியாதை நிமித்தமாக நடந்ததா என்பது தெளிவாக தெரியாதபோதிலும், ரவி மோகன் குடும்ப சர்ச்சை உச்சத்தில் இருக்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளதால் இணையத்தில் பலவிதமான கேள்விகள் எழுந்துள்ளன.

குறிப்பாக ரவி மோகனின் ரசிகர்கள் இதை வைத்து பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். "எங்கள் அண்ணன் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும். முதல்வர் விஜய் உண்மையை புரிந்து ரவி மோகனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்" என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Ravi Mohan Jayam Ravi Aarthi Ravi Sujatha CM Vijay

மறுபுறம், இந்த விவகாரத்தில் ஆர்த்தி தரப்பிலிருந்தும் சில மறுப்புகள் முன்பே வந்திருந்தது. ரவி மோகன் கூறிய சில குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து, வேறு கோணங்களும் இருப்பதாக அவர்கள் தரப்பு தெரிவித்து இருந்தனர். இதனால் இந்த குடும்ப பிரச்சனை ஒரு தனிப்பட்ட விவகாரத்தை தாண்டி பொது விவாதமாக மாறி வருகிறது.

ரவி மோகனின் எமோஷனலான பேச்சு, அவருக்கு ஆதரவாக பிரபலங்களின் கருத்துகள், சமூக வலைதளங்களில் பெருகும் விவாதங்கள், இப்போது மாமியார் முதலமைச்சரை சந்தித்த சம்பவம் என இந்த விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமா? அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதாவது காரணமா? ரவி மோகன் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+