ஒரே தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்.. நல்ல விஷயங்களை பாராட்ட அனுமதி தேவையில்ல! அதிமுக சரவணன் பளீர்
சென்னை: அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பிற்கு அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், சினிகா நடிகர்கள் பிற மாநிலங்களில் வெற்றி பெற முடியாத நிலையில் தமிழகத்தில் விஜய் ஒரே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் இந்த உணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்ற தகவல் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், உரிய அரசுத்துறை செயலாளர்களுடன் இதுகுறித்து கலந்தாலோசித்த நிலையில், அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டார்.

அம்மா உணவகம்
இந்நிலையில், அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பிற்கு அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று கோ.புதூரில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டு பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்காக அம்மா உணவகங்களை தொடங்கினார்.
டாக்டர் பா.சரவணன்
தமிழகத்தை தொடர்ந்து வட மாநிலங்களில் வெற்றிகரமாக அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்பட்டன. அம்மா உணவகங்களை மேம்படுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அம்மா உணவக பணியாளர்களுக்கு ஊதியங்கள் நிலுவையில் உள்ளது. குறைந்த அளவில் உணவுகள் தயார் செய்யப்படுகிறது. மேலும், அம்மா உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் நல்லெண்ணம் அடிப்படையில் அதிமுக திட்டங்களை செயல்படுத்துகிறார்.
முதலமைச்சர் விஜய்
திமுக மற்றும் அதிமுக திட்டங்களை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், மக்கள் நல திட்டங்களை முதலமைச்சர் விஜய் செயல்படுத்துவார் என நம்புகிறேன். முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் அம்மா உணவகங்கள் செயல்படுத்தலாம். முதலமைச்சர் ஜோசப் விஜய் மக்களுக்காக உழைக்க நினைக்கிறார். மக்களுக்கான திட்டங்களை தமிழக அரசு செய்கிறது, அதை தான் பாராட்டுகிறோம். நான் மட்டுமல்ல அனைவரும் முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகளை பாராட்டாலேமே.
எடப்பாடி பழனிச்சாமி
நல்ல விஷயங்களுக்களை பாராட்ட அனுமதி பெற தேவையில்லை. விஜய் தேர்தலில் வென்று விட்டார், மக்கள் மனதை வெல்வாரா? என பொறுத்து இருந்து பார்ப்போம். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான், அவர் தலைமையை ஏற்கிறேன். தவெகவின் வெற்றியை ஒரு தேர்தலில் தீர்மானிக்க முடியாது. சினிகா நடிகர்கள் பிற மாநிலங்களில் வெற்றி பெற முடியாத நிலையில் தமிழகத்தில் விஜய் ஒரே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்" என கூறினார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
உங்கள் மண்டையில் ஏதாவது இருக்குதா! விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் வெடித்து பேசிய மேயர் பிரியா! -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications