மதுரை அரசு டாக்டர்கள் செல்போன் உபயோகிக்க தடை
மதுரை:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் டாக்டர்களும், மருத்துவ பேராசிரியர்களும்செல்போன்கள் பயன்படுத்துவதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேம்ஸ் பாண்டியன் தடைவிதித்துள்ளார்.
ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை பரிசோதித்துக் கொண்டிருக்கும்போதுடாக்டர்களுக்கு செல்போன் அழைப்புகள் வருவதாகவும், நோயாளிகளை விட்டுவிட்டு அவர்கள்நீண்டநேரம் போனில் பேசுவதால், தாங்கள் பாதிக்கப்படுவதாக நோயாளிகள் அடிக்கடி புகார் கூறிவந்தனர்.
இதைத் தொடர்ந்து நோயாளிகளின் நலனை முன்னிட்டு மருத்துவமனை வளாகத்திற்குள் டாக்டர்கள்,பேராசிரியர்கள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர்ஜேம்ஸ் பாண்டியன் தடை விதித்துள்ளார்.
நோயாளிகளை பரிசோதித்துக் கொண்டிருக்கும்போது, செல்போனில் பேசுவதால், தவறானமுடிவுகள் ஏற்பட்டு விட வாய்ப்புகள் இருப்பதால், இந்தத் தடை விதிக்கப்படுவதாக ஜேம்ஸ்பாண்டியன் கூறியுள்ளார்.
அதேபோல, மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கும்போது செல்போன்கள்வந்தால், வகுப்பு எடுப்பது பாதிக்கப்பட்டு மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால்பேராசிரியர்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


