அவதூறு வழக்கு: மார்க். கம்யூ. செயலர் கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக எழுதியதாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் வரதராஜன் சென்னை நீதிமன்றத்தில்ஆஜரானார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவோடு ஹைதரபாத்திற்குச்சென்றபோது, சென்னையிலிருந்து அதிகாரிகளை ஹைதராபாத்திற்கு வரவழைத்து, ஸ்டாலின்மீதான மேம்பால ஊழல் வழக்கு குறித்து விவாதித்ததாகவும், பள்ளிக் கட்டடங்கள் கட்டியதில் நடந்தஊழல் தொடர்பாக வழக்கு தொடர்வது குறித்து விவாதித்ததாகவும் இந்து நாளிதழ் செய்திவெளியிட்டிருந்தது.
இந்த செய்தியை, கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் பத்திரிக்கை தமிழாக்கம் செய்து வெளியிட்டது.இதைத் தொடர்ந்து இது தொடர்பாக தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், தனது பெயருக்குகளங்கம் ஏற்பட்டு விட்டதாகவும் கூறி முதல்வர் ஜெயலலிதா சார்பில், வரதராஜன், தீக்கதிர் ஆசிரியர்பரமேஸ்வரன், இந்து நாளிழ் நிருபர், ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது அரசு வக்கீல்,சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனைவருக்கும் நீதிபதி ஜெயபால் நோட்டீஸ்அனுப்பினார்.அதன்படி நேற்று வரதராஜன், பரமேஸ்வரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.பின்னர் இந்த வழக்கை நவம்பர் 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இந்து ஆசிரியர், நிருபர்,வெளியீட்டாளர் மீதான வழக்கை நவம்பர் 12ம் தேதிக்கு நீதிபதி ஜெயபால் ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications