புதிய தலைமைச் செயலகம்: டெண்டர் விட்டது அரசு
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கானடெண்டர் விடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) இந்த டெண்டரை கோரியுள்ளது. கட்டுமானப்பணிக்கு மட்டுமல்லாது, பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள் ஆகியோரும் இந்தப்பணியில் ஈடுபட விண்ணப்பிக்கலாம் என்றும் டெண்டரில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள விதான செளதாவை விடவும், டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனை விடவும்சிறந்த முறையில் கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைய வேண்டும் என்றுடெண்டரில்முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகத்தில் சட்டசபை வளாகம், மாநாட்டுக் கூடம் ஆகியவையும்அமையவுள்ளன.
10 முதல் 12 லட்சம் சதுர அடியில் இந்த பிரமாண்ட தலைமைச் செயலகம் அமையவுள்ளது. 6தளங்கள் கொண்டதாகவும், எதிர்காலத்தில் மேலும் 3 தளங்கள் அமைக்கும் வகையிலும் இக்கட்டடம் எழுப்பப்படவுள்ளது.
2 ஆண்டுகளுக்குள் இந்தக் கட்டடத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்றும் டெண்டரில்கூறப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த நிறுவனங்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க விரும்பினால்தங்களது தகுதி, அனுபவம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என்று சி.எம்.டி.ஏ. அறிவித்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய நிறுவனங்கள் தவிர மலேசிய நிறுவனம் ஒன்றும் குதிக்கலாம் என்றுதெரிகிறது. முதலில் மகாபலிபுரம் சாலையில் அமைக்கத் திட்டமிடப்பட்ட தலைமைச் செயலகக்கட்டத்தை அந்த நிறுவனம் தான் கட்ட இருந்தது.
எனவே, இந்தப் பணி மலேசிய நிறுவனத்துக்கே ஒதுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகக்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications