புதிய தலைமைச் செயலகம் தேவைதானா?: ஜெவுக்கு வாசன் கேள்வி
திருச்சி:
தமிழகத்தில் வறட்சியும், வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடும் நிலையில் பல ஆயிரம்கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் செயல் தேவையில்லாதது, கடுமையாகக்கண்டிக்கத்தக்கது என்று காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. காவிரியில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இந் நிலையில் பல கோடி ரூபாய் செலவில், புதிய தலைமைச் செயலகம்அமைப்பது தேவையில்லாத செயல்.
இப்படிப்பட்ட நிலையில் புதிய தலைமைச் செயலகம் தேவையா என்று மக்கள் கேள்விகேட்கிறார்கள். இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.
கெளரவ ரேஷன் கார்டு மக்கள் விரோதமான திட்டமாகும். இதனால் நடுத்தர வர்க்க மக்கள்கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இளங்கோவன் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெறச் சொல்லி உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது, தமிழக அரசுக்குக் கிடைத்துள்ள பாடமாகும். இனிமேலாவது கண்மூடித்தனமாகவழக்குகள் போடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications