அம்மை நோய்க்கு 500 ஆடுகள் பலி

Subscribe to Oneindia Tamil

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அம்மை நோய் தாக்கி 500 ஆடுகள் பலியாகியுள்ளன.

பழனி அருகே உள்ள கிராமம் பாலசமுத்திரம். இங்குள்ள ஆடுகளுக்கு அம்மை நோய் தாக்கியது.இதைத் தொடர்ந்து ஏராளமான ஆடுகள் இறக்கத் தொடங்கின.

இதுகுறித்து பாலசத்திரம் அரசினர் கால்நடை மருத்துவமனைக்குத் தகவல் கொடுக்கப்பட்டும்உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந் நிலையில் ஆடுகள் கொத்துக் கொத்தாக இறக்க ஆரம்பித்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும்500 ஆடுகளுக்கு மேல் இறந்துள்ளன. இதனால் இந்தக் கிராம மக்கள் ஆடுகளை விற்கஆரம்பித்துள்ளனர்.

ஆனால், இந்த கிராம ஆடுகளை வாங்க மற்ற ஊர்க்காரர்கள் மறுத்து வருகின்றனர்.

பாலசமுத்திரம் கிராமத்தில் 6,000 ஆடுகள் உள்ளன. இறந்த ஆடுகளின் உடல்களை, குளம்,கண்மாய்க்கு அருகே மக்கள் புதைத்து வருவதால், அந்த நீர் நிலைகளைப் பயன்படுத்தும்மனிதர்களுக்கும் நோய் பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+