ஹைதராபாத் பழசாகிவிட்டதா?: ஊட்டி சென்ற ஜெ. குறித்து இளங்கோவன் கிண்டல்
கோவை :
காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்க விண்ணப்பப் படிவங்களைப் பெறாமல் இருக்கும்மாவட்டச் செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் இளங்கோவன் எச்சரித்துள்ளார்.
ஜி.கே.வாசன் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் இன்னும் உறுப்பினர் பாரங்களை வாங்காமல்புறக்கணித்து வருகின்றனர். இளங்கோவன் மற்றும் சோ.பாலகிருஷ்ணன் மீதுள்ள அதிருப்திகாரணமாக இவ்வாறு புறக்கணிப்பு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன்,
23 மாவட்ட செயலாளர்கள் இன்னும் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வாங்காமல் புறக்கணித்துவருகின்றனர். அவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன்.
உடனடியாக உறுப்பினர் படிவங்களை வாங்கிச் செல்லாவிட்டால், அவர்கள் நம்பியிருக்கும்தலைவரால் (வாசன்) கூட அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்.
அனைவரும் கூண்டோடு கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்.
கண்ணகி சிலை அகற்றியதை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், சீரணி அரங்கம் என்ன பாவம்செய்தது என்று தெரியவில்லை. தலைமைச் செயலகம் கட்டுவதில் அதிக அக்கறை எடுத்து வரும்ஜெயலலிதா, அடிக்கடி மந்திரிகளை மாற்ற வசதியாக தலைமைச் செயலகத்தை கவர்னர்மாளிகைக்கே மாற்றிவிடலாம்.
ஜெயலலிதா இப்போது ஊட்டிக்குப் போய்விட்டார். ஹைதராபாத் பழசாகிவிட்டது போலும். 5 நாள்ஊட்டியில் தங்கியிருந்தாலும் அங்கு மக்களைச் சந்திக்கக் கூட அவருக்கு நேரமில்லை என்றார்இளங்கோவன்.












Click it and Unblock the Notifications