For Daily Alerts
Just In
ஊட்டியில் ரூ. 77 கோடி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் ஜெ
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ரூ. 77.5 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை முதல்வர் ஜெயலலிதா இன்று ஊட்டியில் தொடங்கி வைத்தார்.
சசிகலாவுடன் ஊட்டியில் ஓய்வெடுத்து வரும் ஜெயலலிதா இன்று இந்தத் திட்டங்களை தொடங்கிவைத்தார்.
இதற்கான விழா ஊட்டி அரசுக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. சபாநாயகர் காளிமுத்துநிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அமைச்சர்கள் மில்லர், வளர்மதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின்போது, 4,300 பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
விழாவையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று பிரதமர் வாஜ்பாய்சென்னை வரும் நிலையில் அதே தேதியில் ஊட்டியில் விழாவுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ததுகுறிப்பிடத்தக்கது.


