சுற்றுச்சூழலுக்காக ராமதாசின் மகன் சைக்கிள் பேரணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி தலைமையில் சென்னைபள்ளிக்கரணை பகுதியில் இன்று சைக்கிள் பேரணி நடக்கவுள்ளது.

பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஏரிப் பகுதி மற்றும் சதுப்பு நிலப் பகுதியில் குப்பைகளைகொட்டுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

மேலும் வேடந்தாங்கலைப் போல இங்கும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்துசெல்கின்றன. ஆனால் இப்போது சதுப்பு நிலப் பகுதி குப்பை மேடாகிவிட்டதால் பறவைகளும்குறைந்து விட்டன.

இந்தப் பகுதியில் தான் தற்போது சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் நகராட்சி ஆகியவை தங்களதுபகுதியில் சேரும் குப்பைகளை கொட்டி வருகின்றன. மேலும் குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல்மாசுபட்டு இங்கு பறவைகள் வருவதே அரிதாகிக் கொண்டு வருகிறது.

இந் நிலையில் பள்ளிக்கரணையின் இயற்கைச் சூழலைக் காக்கும் நோக்கத்துடன் அன்புமணிதலைமையிலான பசுமைத் தாயக அமைப்பு இன்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணியைநடத்துகிறது.

பள்ளிக்கரணையில் தொடங்கி வேளச்சேரி, தரமணி, துரைப்பாக்கம் வழியாக காரப்பாக்கத்தில்முடிவடையும் இந்த சைக்கிள் பேரணியில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+