சென்னை வந்தார் வாஜ்பாய்: மாறனைப் பார்த்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமர் வாஜ்பாய் இன்று சென்னை வந்தார். அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று மத்தியஅமைச்சர் முரசொலி மாறனைப் பார்த்தார்.

விமானப் படையின் சிறப்பு விமானத்தில் பகல் 12.30 மணிக்கு வாஜ்பாய் சென்னை வந்தார்.அவரை ஆளுநர் ராம் மோகன் ராவ், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, மத்தியஅமைச்சர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், பொன்னையன்,தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

திமுக சார்பில் பொதுச் செயலாளர் அன்பழகன், செ.குப்புசாமி, ஆற்காடு வீராசாமி, மதிமுகஅமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி, பா.ஜ.க.பொதுச் செயலாளர் இல.கணேசன், தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து வாஜ்பாய் நேராக அப்பல்லோ மருத்துவமனைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்குஅவரை திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜா ஆகியோர் வரவேற்று மாறன்அனுமதிக்கப்பட்டுள்ள ஐ.சி.யூ. வார்டுக்கு அழைத்துச் சென்றனர்.

படுக்கையில் செயற்கை சுவாசத்துடன் படுத்திருந்த முரசொலி மாறனை நெருங்கி, மாறன் என வாஜ்பாய்அழைத்தாகவும் மாறன் லேசாக திரும்பிப் பார்த்தாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து கருணாநிதி, மாறன் குடும்பத்தினர் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் இயக்குனர் பிரதாப்ரெட்டி ஆகியோரிடம் மாறனின் உடல் நிலை குறித்தும், தரப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் வாஜ்பாய்கேட்டறிந்தார்.

சுமார் 20 நிமிடங்கள் அங்கிருந்த வாஜ்பாய் பின்னர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திவிட்டுவாஜ்பாய் ஆளுநர் மாளிகைக்குக் கிளம்பிச் சென்றார். அப்போது அவரிடம் கேள்விகள் எழுப்பியநிருபர்களுக்கு பதில் ஏதும் சொல்ல பிரதமர் மறுத்துவிட்டார்.

ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்த பின் இன்று மாலை நடைபெறவுள்ள 5 மணியளவில் சென்னைபல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் ஹிந்து பத்திரிக்கையின் 125வது ஆண்டுவிழாவில் வாஜ்பாய் பங்கேற்கிறார்.

அதன் பின்னர் விமான நிலையத்தில் பா.ஜ.கவினருடன் ஆலோசனை நடத்திவிட்டு இரவு 7.30மணிக்கு டெல்லி திரும்புகிறார்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. அவர் செல்லும் வழியெங்கும் சுமார் 3.000 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.பிரதமர் செல்லும் இடங்களில் மொபைல் போன்களை செயலழிக்கச் செய்யும் ஜாமர்கள்பொறுத்தப்பட்டுள்ளன.

சாதாரண உடையிலும் ஏராளமான போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+