ராமேஸ்வரம் ரயில் தடம் புரண்டது
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் சென்ற பாசஞ்சர் ரயில் ராமநாதபுரம் அருகே தடம் புரண்டது.
திருச்சிக்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையே பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை ராமநாதபுரம்அருகே இந்த ரயில் தடம்புரண்டது.
ரயில் என்ஜினின் கடைசி சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து இறங்கிவிட்டன. மற்ற பெட்டிகள் ஏதும் தடம்புரளவில்லை. இதனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
உடனடியாக மீட்பு நடவடிக்கை தொடங்கியது. 2 மணி நேரத்திற்குப் பின் என்ஜின் மீண்டும் தண்டவாளத்தில்வைக்கப்பட்டது. விபத்தினால் இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து நேரம் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications