பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்து தேர்தல்: 2 பேர் வேட்பு மனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு தேவர் சமூகத்தினரின் எதிர்ப்பையும் மீறி 2பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டார் மங்கலம், விருதுநகர் மாவட்டம்கொட்டகச்சியேந்தல் ஆகிய தலித் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு வரும் அக்டோபர் 9ம் தேதி தேர்தல்நடைபெறவுள்ளது.

தலித்களை தலைவர்களாக ஏற்க தேவர் சமூகத்தினர் காட்டி வரும் எதிர்ப்பு காரணமாக கடந்த பல வருடங்களாகஇந்த பஞ்சாயத்துக்களுக்கு தேர்தலே நடத்தப்பட முடியவில்லை. தலித் யாராவது போட்டியிட்டாலும் அவர்களதுஉயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுகிறது.

இந்த தலித் கிராம பஞ்சாயத்துக்களுக்கு சமீபத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான உயர் மட்டக்குழு சென்று மக்களை சந்தித்தது. தேவர் சமூகத்தினருடன் நெடு நேரம் ஆலோசனை நடத்தியது இந்தக் குழு.

இந் நிலையில் பாப்பாபட்டி கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலுக்கு இன்று இரண்டு பேர் வேட்பு மனு தாக்கல்செய்துள்ளனர்.

ஆனால், மற்ற தலித் பஞ்சாயத்துக்களுக்கு இதுவரை யாரும் வேட்பு மனுவே தாக்கல் செய்யவில்லை. நாளைமறுநாளுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது.

கடந்த முறை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் போட்டியிட்டு வென்ற தலித்கள் உடனடியாகதங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டதோடு, ஊரை விட்டும் வெளியேறிவிட்டனர். இதுவரை அவர்கள்சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+