தலித் பஞ்சாயத்து அவலங்கள்: கீரிப்பட்டியில் போட்டியிட்ட 2 பேரும் வாபஸ்
மதுரை:
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தஇரண்டு தலித் வேட்பாளர்களும் தங்களது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதால், இந்த முறையும் அங்கு தேர்தல்நடைபெறும் வாய்ப்பு போய் விட்டது.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டகச்சியேந்தல் ஆகியநான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும் அக்போடர் 9ம தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும் பல காலமாக தேர்தலே நடைபெறவில்லை. அப்படியே நடந்தாலும்,தேர்தல் முடிந்தவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தேவர் சமூகத்தினரால் மிரட்டப்பட்டு பதவி விலகி விடுவதுவழக்கம்.
இந் நிலையில் பாப்பாபட்டி 3 பேரும், கீரிப்பட்டியில் 2 பேரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். ஆனால்,நாட்டாரம மங்கலம், கொட்டாச்சியேந்தல் பஞ்சாயத்துகளில் யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
இந் நிலையில் கீரிப்பட்டியில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த 2 பேரும் இன்று போட்டியில் இருந்து வாபஸ்பெற்றுவிட்டனர். இதையடுத்து கீரிப்பட்டியில் இந்த முறையும் தேர்தல் நடைபெறும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
பாப்பாபட்டியில் மனுத்தாக்கல் செய்துள்ள 3 பேரும் போட்டியில் உள்ளனர். எனவே இங்கு மட்டுமே தேர்தல்நடக்கவுள்ளது.
தலித்களை போட்டியிடக் கூட விடாமல் தடுக்கும் இந்த 4 பஞ்சாயத்துகளுக்கும் குடிநீர், மின் இணைப்பு, பஸ்வசதிகளைத் தடை செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications