கேரள மீனவர்கள் அட்டகாசம்: போராடம் நடத்த குமரி மாவட்ட மீனவர்கள் முடிவு
நாகர்கோவில்:
அரபிக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கேரள மீனவர்கள் தொடர்ந்து தாக்கி வருவதைக்கண்டித்து தமிழக- கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் சாலை மறியல் போராட்டம் நடத்தகன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்ட மீனவர்கள், கேரள கடல்பகுதியில் பல நூற்றாண்டு காலமாக மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக தமிழக மீனவர்களை கேரள மீனவர்கள் தாக்குவதும், படகுகளுக்கு தீ வைப்பதும்அதிகரித்து வருகிறது.
கொல்லம் பகுதியில் ஆரம்பித்த இந்த மோதல் தற்போது கொச்சி வரை சென்றுள்ளது. சமீபத்தில் கொச்சிதுறைமுகத்தில் இருந்து பல கி.மீ. தூரத்தில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்ட மீனவர்கள் 9பேர் மீது கொலை வெறித் தாக்குதல் நடந்தது.
இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். தமிழக மீனவர்களின் படகும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதையடுத்து குமரி மாவட்ட மீனவர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில், கேரளமீனவர்களுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், களியக்காவிளை பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தவும்முடிவு செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த களியக்காவிளை பகுதி வழியாகத் தான் தென் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு எனசகலமும் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications