சத்துணவுக்கான செலவை 10 சதவீதம் குறைக்க அரசு திட்டம்
சென்னை:
பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவுக்கான திட்டச் செலவில் 10 சதவீதத்தைக் குறைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக செலவிடப்படும் தொகையைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மாநில சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பிரிவிலிருந்து,அனைத்து மாவட்ட திட்ட அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அந்தக் கடிதத்தில் சில திட்டங்களுக்கான செலவீனங்களைக் கணிசமாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, பள்ளிக் குழந்தைகளுக்கு தினசரி வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்திலும் 10 சதவீத செலவுகளைக்குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிக்கு ஒழுங்காக வரும் மாணவ, மாணவியருக்கு மட்டுமே இனிமேல் சத்துணவு வழங்கப்படும்.அதற்கேற்ற வகையில் சத்துணவு வழங்குவதை திட்டமிட்டுக் கொள்ளவும் என்று அந்தக் கடிதத்தில்கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், ஒரு மாதத்திற்கு எவ்வளவு பேருக்கு சத்துணவு வழங்கப்படுகிறது என்ற பட்டியலை தயாரிக்கும்படியும்,அந்த எண்ணிக்கைக்கு கூடுதலாக யாருக்கும் சத்துணவு வழங்கப்படக் கூடாது என்றும் திட்ட அதிகாரிகளுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பின் மூலம், சத்துணவு பெறும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை கணிசமாககுறைக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
இதன் மூலம் அங்கன்வாடிப் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறையும் ஆபத்தும்ஏற்பட்டுள்ளது.
சாப்பாடு கிடைக்கிறது என்பதற்காகத்தான் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள ஏழை, எளியவர்கள் தங்களதுகுழந்தைகளை பள்ளிக்கே அனுப்பி வருகிறார்கள். இப்போது இதிலும் கட்டுப்பாடு வருவதால், இலவச உணவுகிடைக்காத மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்தி விடும் நிலைமை ஏற்படும்.
தற்போது சத்துணவுக்காக ஒரு குழந்தைக்கு 35 பைசா செலவு செய்யப்படுகிறது. இதற்குள் ஒரு குழந்தைக்குத்தேவையான அரிசி, காய்கறி, தானியங்களை வாங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இதையும் குறைத்தால்சத்துணவு தயார் செய்வதே மிகவும் கடினம் என்று சத்துணவு அமைப்பாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும் செலவு குறைப்பு தொடர்பாக இதுவரை எந்தவித உத்தரவும் சமூக நலத்துறையிலிருந்துபிறப்பிக்கப்படவில்லை என்று அத்துறையின் அமைச்சர் வளர்மதி கூறுகிறார்.
ஆயினும், ஒரு கடிதமும் வாய் மொழி உத்தரவும் வந்திருப்பதாக சத்துணவுத் திட்ட அமைப்பாளர்கள்தெரிவிக்கிறார்கள்.
கல்விக் கண் திறப்பதற்காக காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதுஅநைத்துப் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டது இந்தத் திட்டம். கருணாநிதி முதல்வரானதும் வாரம் ஒருமுட்டையும் வழங்கினார்.
ஜெயலலிதா முதல்வரானதும் முட்டை கட் ஆனது. இப்போது சத்துணவுத் திட்டம் நீடிக்குமா என்பதேசந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications