மியூசிக் அகாடமி செயற்குழுவில் அமளி: போலீஸ் வரவழைப்பு
சென்னை:
மிக பிரதித்தி பெற்ற செனனை மியூசிக் அகாடமியின் செயற்குழுக் கூட்டத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடாமல் தடுக்க போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
சென்னையில் பிரபலமானது மியூசிக் அகாடமி. இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் பெயர் பெற்றஅமைப்பு. இந்த அமைப்பின் செயற் குழுவைக் கூட்டுவது தொடர்பாக சிக்கல் ஏற்படவே, உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நேற்று செயற்குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. டி.டி.கே. சாலையில் உள்ள மியூசிக் அகாடமியிலேயே இக் கூட்டம் நடந்தது.
வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள இசை விழா குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.இக் கூட்டத்தில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை மத்திய மண்டலப் பதிவாளர் குணசேகரன் கலந்துகொண்டார். அகாடமி தலைவர் டி.டி.வாசு கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
டிசம்பர் இசை விழா குறித்த விவாதத்தின்போது, சங்கீத கலாநிதி விருது யாருக்கு வழங்குவது என்பது குறித்துபேச்சு எழுந்தது. அப்போது கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி நடந்த செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகளை (அந்தக் கூட்டம் பதிவாளரின் கண்காணிப்பில் நடைபெறவில்லை) செயற்குழு அங்கீகரிக்க வேண்டும்என்று டி.டி.வாசு தெவித்துள்ளார்.
அதை மற்ற உறுப்பினர்கள் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக பதிவாளர் குணசேகரனிடம் அவர்கள்முறையிட்டனர்.
அப்போது தேர்ந்தெடுக்கப்படாத 2 உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு வாசு ஆட்சேபனைதெவித்தார். இதையடுத்து அங்கு ஆளாளுக்கு எழுந்து பேச ஆரம்பித்தனர். வாக்குவாதம் ஏற்பட்டது
ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் சூழ்நலையும் ஏற்பட்டது. ஆங்கிலம், இந்தி, தமிழ் என சகலமொழிகளிலும் தடித்த வார்த்தைகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஒருவரையொருவர் வாடா, போடா எனஒருமையில் அழைத்துத் திட்டிக் கொண்டனர்.
சிலர் அடிக்கவும் பாயந்தனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த அகாடமி நிர்வாகிகள் உடனே போலீஸாருக்குத்தகவல் கொடுத்தனர். இதையடுத்து ராயப்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் பழனிச்சாமி தலைமையில்போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் வந்த பின்னரே கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. பின்னர் கூட்டம் தொடர்ந்தது. கர்நாடக சங்கீதத்தையேதூக்கி வைத்து ஆடும் இந்த அகாடெமியில் தமிழ் இசைக்கு முன்பு மரியாதையே தரப்பட்டதில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications