விமானத்தில் தீ: சென்னையில் அவசரமாய் தரையிறங்கிய துபாய்--சிங்கப்பூர் விமானம்
சென்னை:
சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் தீ விபத்துஏற்பட்டதையடுத்து, இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.
398 பயணிகளுடன் அந்த ஏர் பஸ் விமானம் துபாயில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்தது.தமிழகத்தின் மீது பறந்தபோது அந்த விமானத்தின் சரக்குகள் வைக்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.விமானிகளின் காக்பிட்டில் தீ அபாய எச்சரிக்கை விளக்குகள் எரிந்தன.
இதையடுத்து விமான ஊழியர்கள் சரக்குப் பகுதியில் சோதனையிட்டபோது அங்கு தீப்பொறிகள் வெடித்துப்பரவியதைக் கண்டு பைலட்களுக்குத் தகவல் தந்தனர். இதையடுத்து விமானத்தை சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் அவசரமாகத் தரையிறக்க விமானிகள் அனுமதி கோரினர்.
உடனடியாக அனுமதி தரப்பட்டதோடு, எமெர்ஜென்சி லேண்டிங்குக்கு விமான நிலையம் தயாரானது. பின்னர்அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 380 பயணிகளும் 18 ஊழியர்கள் பத்திரமாகத்தரையிறக்கப்பட்டனர்.
தீயணைப்புப் படையினர் விமானத்துக்குள் சென்று பார்த்தபோது 3 பைகள் தீயில் எரிந்து கொண்டிருந்தன. அந்தத்தீ உடனடியாக அணைக்கப்பட்டது.
மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இச் சம்பவம் குறித்து அந்த விமானத்தின் பைலட்களிடம்நிருபர்கள் கருத்து கேட்க முயன்றபோது, எதுவும் பேச அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் விமானம் மீண்டும்சிங்கப்பூர் கிளம்பிச் சென்றது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications