மனைவி, 5 மகள்களைக் கொன்ற தந்தைக்கு 6 ஆயுள் தண்டனைகள்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

மனைவி மற்றும் 5 மகள்களை எரித்துக் கொன்ற கொடூர தந்தைக்கு விழுப்புரம் செஷன்ஸ் நீதிமன்றம் 6 ஆயுள்தண்டனைகளை விதித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். இவரது மனைவி பத்ருன்னிஷா.இவர்களுக்கு நபீஸா, ஜெரீனா, ஷகீதா, நஸ்ரீன, ஷகீலா, யாஸ்மின் ஆகிய 6 மகள்கள் இருந்தனர்.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அப்துல் கரீம் பின்னர் விழுப்புரத்திற்கே திரும்பி விட்டார். இந் நிலையில்தனது தம்பிக்கும், தனது மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக சிலர் சொல்வதைக் கேட்டுஆத்திரமடைந்தார் அப்துல்கரீம்.

மேலும் மூத்த மகள் நபீஸா ஒருவரைக் காதலித்து வருவதாகவும் கேள்விப்பட்டார்.

இதனால் வீட்டில் மோதல் வெடித்தது. அடிக்கடி மனைவியையும் குழந்தைகளையும் அடிப்பதையும் திட்டுவதையும்வழக்கமாக்கிக் கொண்டார் அப்துல்கரீம்.

இதனால் மனம் வெறுத்துப் போன இரண்டாவது மகள் ஜெரீனா, தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தற்கொலைக்கு தனது மனைவியும், மகள்களும் தான் காரணம் என்று நினைத்த அப்துல் கரீம்தனது குடும்பத்தையே தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

குடும்பத்திற்கு ஏற்பட்ட திருஷ்டியைக் கழிக்க வெளியூர் செல்லலாம் என்று கூறி இரவு நேரத்தில் குடும்பத்தினர்பாக்கம் கிராமத்தை விட்டுக் கிளம்பினார். கிராமத்திற்கு வெளியே பெரிய பள்ளத்தை வெட்டித் தயார்செய்திருந்தார்.

பள்ளத்தின் அருகே சென்றதும் மனைவியை கழுத்தை நெறிக்க ஆரம்பித்தார். இதைத் தடுக்க வந்த மகள்களையும்கழுத்தை நெறித்தார்.

இதில் மனைவி இறக்கவே, பெரிய பள்ளத்தில் மனைவியைத் தள்ளினார். இதையடுத்து 5 மகள்களையும் ஒருவர்பின் ஒருவராக கழுத்தை நெறித்து பள்ளத்துக்குள் தள்ளினார். மூச்சுத் திணறி அரைகுறை மயக்கத்தில் இருந்தமனைவி, மகள்களை அப்படியே மண்ணைப் போட்டு மூடினார்.

இதில் மனைவியும் 5 மகள்களும் மூச்சுத் திணறி இறந்தார்கள்.

அதன் பின்னர் ஊரை விட்டு வெளியேறிவிட்ட அப்துல்கரீம் நாகர்கோவில் சென்றுவிட்டார். அங்கு கூலி வேலைபார்க்கத் தொடங்கினார்.

இந்தக் கொலைகள் குறித்து கிராமத்தில் யாருக்கும் தெரியவில்லை. மனைவி, குழந்தைகளோடு ஊரை விட்டேஅப்துல்கரீம் சென்றுவிட்டதாக அனைவரும் கருதினர்.

ஆனால் தனது மனசாட்சி உறுத்தவே, பாக்கம் கிராமத்திற்கு திரும்பி வந்த அப்துல் கரீம், கிராம நிர்வாகஅதிகாரியைச் சந்தித்து நடந்ததைக் கூறினார். அதிர்ச்சியடைந்த கிராம அதிகாரி அவரை போலீஸாரிடம்ஒப்படைத்தார்.

இந்தக் கொலை வழக்கு விழுப்புரம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிராமமூர்த்தி மனைவி, மகள்களைக் கொலை செய்த அப்துல் கரீமுக்கு 6 ஆயுள் தண்டனைகளை வழங்கினார்.

கொலைகளை மறைத்த குற்றத்திற்காக 7 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ. 30,000 அபராதமும் விதித்தார். இந்த 6ஆயுள் தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+