வெங்கடேச பண்ணையாரின் எண்கெளன்டர் சாவு: குற்றம் சாட்டப்படும் முன்னாள் ஆளுநர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தூத்துக்குடி மாவட்ட நாடார் இன முக்கிய பிரமுகரான வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டவிவகாரத்தில் முன்னாள் தமிழக ஆளுநரின் பெயரும் அடிபடுகிறது. இந் நிலையில் வெங்கசேடனை சுட்டுக்கொன்ற துணை கமிஷ்னர் மாற்றப்பட்டுள்ளார்.

இது குறித்து நக்கீரன் வெளியிட்டுள்ள செய்தி விவரம்:

வெங்கடேச பண்ணையாரின் நண்பரும் பெப்சி டீலருமான முரளி என்பவரிடம் ஆடிட்டர் ஒருவர் ரூ. 1 கோடிகடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தைத் திருப்பித் தர அவர் மறுத்ததால் வெங்கடேசன் தலையிட்டுள்ளார்.

அப்போது, கீழ்பாக்கத்தில் இயங்கி வரும் லீடர்ஸ் கேபிடல் சர்வீஸஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின்அதிபர் ஷமீர் தனக்கு ரூ. 1 கோடி தர வேண்டி இருப்பதாகவும், அதை அவரிடம் இருந்து வாங்கிக் கொள்ளுமாறும்ஆடிட்டர் கூறியுள்ளார்.

இதையடுத்து ஷமீரிடம் வெங்கடேச பண்ணையார் பேசியுள்ளார். ஆனாலும் பணத்தைத் தராமல் இழுத்தடிக்கவேஷமீருக்கும் வெங்கடேச பண்ணையாருக்கும் மோதல் எழுந்துள்ளது.

இந்த ஷமீர் கேரளத்தைச் சேர்ந்தவராவார். இவர் தனக்கு நெருக்கமான கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் தமிழகஆளுனர் மூலம் வெங்கடேச பண்ணையார் மீது போலீசாரிடம் புகார் கூறியுள்ளார். மேலும் சென்னை போலீசின்தலைமை அதிகாரியும் கேரளத்தைச் சேர்ந்தவர் தான் என்பதால் அவருடனும் அந்த மாஜி ஆளுநர்மலையாளத்தில் பேசியுள்ளார்.

இதையடுத்து வெங்கடேச பண்ணையார் மீது ஒரு வழக்கு ஜோடிக்கப்பட்டது. ஷமீரைக் கடத்தி வைத்து ரூ. 75லட்சம் பேரம் பேசியதாக வழக்குப் போட்டு வெங்கடேச பண்ணையார் எண்கெளன்டர் மூலம்கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு நக்கீரன் தெரிவிக்கிறது.

மேலும் ஷமீர் நடத்தி வரும் நிறுவனம் ஒரு நிழல் உலக நிறுவனம் என்பதும், அது பல்வேறு மோசடிகளில்தொடர்புடையது என்றும் தெரியவந்துள்ளது.

போலீசார் திட்டமிட்டு வெங்கடேச பண்ணையாரைக் கொலை செய்ததோடு அவரை ஒரு ரெளடியாகவும்சித்தரித்துள்ளதால் தென் மாவட்ட நாடார் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தனதுதாத்தாவைக் கொன்றவர்களை ஆள் வைத்து இவர் கொன்றதாகவும, மற்றபடி போலீசார் சொல்வது போல இவர்பெரிய ரெளடியோ, ஆள் கடத்தும் கும்பவைச் சேர்ந்தவரோ இல்லை என்று தெரிகிறது.

இந் நிலையில் தென் மாவட்டங்களில் நாடார் சமூகத்தினர் இடையே அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதால்,வெங்கடேச பண்ணையாரைச் சுட்டுக் கொன்ற துணை கமிஷ்னர் கிருஷ்ணமூர்த்தி இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார்.

இவரை மட்டும் இடமாற்றம் செய்ததாக இருக்கக் கூடாது என்பதற்காக மேலும் சில அதிகாரிகளுக்கும் பதவிஉயர்வுடன் இடமாற்றம் தரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+