டிஸ்மிஸ்: அக். 13 முதல் பத்தொன்பது மாவட்ட ஊழியர்களிடம் விசாரணை
சென்னை:
அக்டோபர் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை பத்தொன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 1,151 அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி முடிக்க 3 நீதிபதிகள் குழு முடிவு செய்துள்ளது.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் 3 நீதிபதிகள் கொண்ட குழுவிசாரணை நடத்தி வருகிறது. தலைமைச் செயலக ஊழியர்கள் 2,789 பேரிடம் முதலில் விசாரணை நடந்தது.பின்னர் சென்னை மாவட்ட அரசு ஊழியர்களிடம் விசாரணை நடந்தது.தற்போது கோவை மாவட்ட ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது. அடுத்து தஞ்சாவூர் ஊழியர்கள் விசாரணைக்குஅழைக்கப்பட்டுள்ளனர். அது முடிந்தவுடன் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை 19 மாவட்டங்களைச் சேர்ந்த 1,151ஊழியர்களை விசாரிக்க நீதிபதிகள் திட்டமிட்டுள்ளனர்.13ம் தேதி காஞ்சிபுரம், கன்னியாகுமரியைச் சேர்ந்த 116 பேரிடம் விசாரணை நடக்கும். 14ம் தேதி மதுரை, கரூர்,நாகப்பட்டனத்தைச் சேர்ந்த 150 ஊழியர்களிடமும், 15ம் தேதி நாகப்பட்டனம், நாமக்கல் மாவட்டஊழியர்களிடமும், 16ம் தேதி மீண்டும் நாமக்கல் ஊழியர்களிடமும், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டஊழியர்களிடமும் விசாரணை நடக்கும்.17ம் தேதி புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 150 பேர் விசாரிக்கப்படுவர். 20ம் தேதிசேலம், சிவகங்கை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 120 பேரிடமும்,. 21ம் தேதி நீலகிரி, தேனி, தூத்துக்குடி,திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 120 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்.22ம் தேதி திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 120 பேடரிம் விசாரணைநடக்கும்.
மீதமுள்ள ஊழியர்கள் எப்போது விசாரிக்கப்படுவர் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று 3 நீதிபதிகள்கொண்ட குழுவின் நீதிமன்ற அதிகாரி ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications