முத்துக்கருப்பன் குறித்து எழுத நக்கீரனுக்கு தடை!
சென்னை:
சென்னை மாநகர முன்னாள் காவல்துறை ஆணையர் முத்துக்கருப்பன் குறித்து செய்திகள், கட்டுரைகள்எழுதுவதற்கு நக்கீரன் வார இதழுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை கமிஷனராக இருந்த முத்துகருப்பன் பின்னர் திருச்சிக்கு மாற்றப்பட்டார். தற்போது இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரைத் துன்புறுத்த வேண்டாம்என்றும் கோரிக்கை விடுத்து அவரது மனைவி தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியதாகவும் நக்கீரன் செய்திவெளியிட்டிருந்தது.
இந் நிலையில் முத்துக்கருப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்டம்பர் 2, 23ஆகிய தேதிகளில் வெளியான நக்கீரன் வார இதழ்களில் என்னைப் பற்றி அவதூறான செய்திகள், கட்டுரைகள்வெளியாகியிருந்தன.
இந்தக் கட்டுரைகள் உண்மையானவை அல்ல, பொய்யான தகவல்களின் அடிப்படையில், எனது பெயரைக்கெடுக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டவை.
இந்த செய்திகள், கட்டுரைகள் வெளியானதையடுத்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அதிகாரிகள்மத்தியில் எனது மரியாதை கெட்டு விட்டது. மிகப் பெரும் மன உளைச்சலுக்கு நான் உள்ளானேன்.
எனது மதிப்பைக் கெடுக்கும் வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்ட நக்கீரன் எனக்கு ரூ. 15 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். மேலும், என்னைப் பற்றி செய்திகள் வெளியிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார் முத்துக்கருப்பன்.
மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி, முத்துக்கருப்பனுக்கு எதிராக இனிமேல் நக்கீரன் இதழில் செய்திகள்வெளியிடக் கூடாது என்று ஆசிரியர் கோபால், இணை ஆசியர் காமராஜ் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications