எஸ்.சி.வி. நிறுவனத்தில் ரெய்டு: மதுரை- திண்டுக்கல்லில் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்
மதுரை:
சன் டிவிக்குச் சொந்தமான எஸ்.சி.வி. கேபிள் (சுமங்கலி கேபிள் விஷன்) நிறுவனத்தின் மதுரை கிளையில்போலீசார் சோதனை நடத்தினர். உரிமம் இல்லாமல் புதிய படங்களை ஒளிபரப்பியதாகக் கூறி அந்த நிறுவனத்தின்கருவிகளைக் கைப்பற்றினர். மேலும் பலரை கைதும் செய்துள்ளனர்.
மதுரை தவிர திருச்சியிலும் இதே போன்ற சோதனை நடந்தது. மதுரையில் சுமங்கலி கேபிள் விஷன் தவிர வேறுசில தனியார் கேபிள் டிவி நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு கருவிகள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து மதுரை முழுவதும் அனைத்துக் கேபிள் டிவி நிறுவனங்களும் தங்களது ஒளிபரப்பை நிறுத்திபோராட்டம் நடத்தி வருகின்றன. திண்டுக்கல்லிலும் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்த் திரைத் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, கொடுத்த புகாரின்பேரில் இந்தச் சோதனைகள்நடத்தப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.
சென்னையில் உள்ள திருட்டு வீடியோ ஒழிப்புப் பிரிவில் செல்வமணி புகார் கொடுத்ததாகவும்
இதேபோன்ற புகாரை மதுரையில் உள்ள திருட்டு வீடியோ ஒழிப்புப் பிரிவுக்கும் அவர் அனுப்பியதாகவும்போலீசார் கூறுகின்றனர்.
இதையடுத்து மதுரை பிராந்திய திருட்டு விசிடி ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரஹீம் தலைமையில் போலீஸ் படை மதுரைசுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தில் போலீஸார் சோதனை நடத்தி டிவி, கம்ப்யூட்டர், ரூ. 10 லட்சம் மதிப்புள்ளதிருட்டு விசிடிக்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர். 6 பேரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications