விவசாயியை துப்பாக்கியால் சுட்ட பஞ்சாயத்துத் தலைவர் கைது
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நேற்று முன் தினம் நடந்த பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இது தொடர்பாக பஞ்சாயத்துத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி முரளி. இதே கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி.
இந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர் ராஜா. இவரது வீட்டில் ராமமூர்த்தி வேலை பார்த்து வருகிறார்.சில மாதங்கள் முன் ராமமூர்த்தி, முரளியிடம் கடன் வாங்கியிருந்தாராம். நீண்ட நாளாகியும் அதை திருப்பி தர வில்லை.
சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில் இருந்த ராமமூர்த்தியிடம் முரளி கடனைக் கேட்டார்.
அப்போது அங்கு வந்த பஞ்சாயத்துத் தலைவர் ராஜா என் வீட்டில் வந்து ராமமூர்த்தியிடம் ஏன் தகராறு செய்கிறாய்? என்று முரளியிடம் கேட்டார். இதில் முரளிக்கும் பஞ்சாயத்துத் தலைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ராஜா உள்ளே சென்று துப்பாக்கியோடு வந்து முரளியை சுட்டார். இதை சற்றும் எதிர்பாரக்காத முரளி குண்டிலிருந்து தப்ப தலையைக் குனிந்தார். அப்போது குண்டு முரளியின் கையில் பாய்ந்தது. காயத்துடன் முரளி தரையில் விழுந்தார்.
உடனே அங்கிருந்து ராஜாவும், ராமமூர்த்தியும் ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த முசிறி டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையிலான போலீஸ் படை விரைந்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முரளியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கியால் சுட்ட பஞ்சாயத்துத் தலைவர் ராஜாவும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications