நாகப்பட்டிணம் இளைஞருக்கு சிங்கப்பூரில் நாளை மரண தண்டனை!
சென்னை:
நாகப்பட்டனத்தைச் சேர்ந்த 25 வயதான அருண் பிரகாஷ் என்ற இளைஞருக்கு நாளை (வெள்ளிக்கிழமை)சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த அருண் பிரகாஷ், கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, தன்னுடன்தங்கியிருந்த லெனின் என்ற தமிழக வாலிபரை குடிபோதையில் ஏற்பட்ட மோதலில், கத்தியால் குத்தினார்.
இதில் லெனின் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
இதைத் தொடர்ந்து அருண் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இதையடுத்து அவரது மரண தண்டனையை ரத்து செய்யக் கோரியும், அதை ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரியும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு உலகளாவிய பிரசாரத்தை தொடங்கியது.
சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கும், அருணின் பெற்றோர் கருணை மனு அனுப்பினர். அதில், அருணுக்குமரண தண்டனை கொடுக்க வேண்டாம், திட்டமிட்டு அவர் இந்தக் கொலையை செய்யவில்லை.
அவரது தண்டனையைக் குறைப்பதன் மூலம் அவர் மனம் திருந்தி வாழ வழி கிடைக்கும். லெனினுக்கும்,அருணுக்கும் இடையே முன் விரோதம் ஏதும் இல்லை. உண்மையில், லெனினைக் கத்தியால் குத்திய பிறகு தனதுநண்பர்களோடு சேர்ந்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே அருண்தான் என்று பெற்றோர்கூறியிருந்தனர்.
சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளும் அதிபர் எஸ்.ஆர். நாதனுக்கு இதே போன்ற கருணை மனு அனுப்பியிருந்தன.
இருப்பினும், அருணின் கருணை மனுவை எஸ்.ஆர்.நாதன் நிராகத்தார். இதையடுத்து அருணுக்கு அக்டோபர் 3ம்தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என சிங்கப்பூர் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அருணின் தந்தை ஒய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். தற்போது நாகப்பட்டிணம் சுங்கத் துறையில் பணியாற்றிவருகிறார். அவரது தாயார் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு அருண் தவிர இரு பெண்குழந்தைகளும் உள்ளனர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications