ஸ்ரீபெரும்புதூரில் கலாம் பங்கேற்கும் விழா: ஜெவுக்கு அழைப்பில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவிடத்தை நாட்டுடமையாக்கும் விழாவில் பங்கேற்கதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

வரும் 10ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடக்கும் இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்பங்கேற்கிறார். மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை இந்த விழாவை நடத்தினாலும், விழாவுக்கான ஏற்பாடுகளைகாங்கிரஸ் தான் செய்து வருகிறது.

ஜனாதிபதி அப்துல் கலாம் இந்த நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு அழைப்பு அனுப்பவில்லை.சோனியாவை கண்டபடி விமர்சித்து வரும் ஜெயலலிதாவை இந்த விழாவுக்கு அழைக்க வேண்டாம் என பிரதமர்மட்டத்தில் இருந்தே மத்திய ஊரக வளர்ச்சித் துறைக்கு உத்தரவு வந்துவிட்டதாகத் தெரிகிறது.

அதே போல காங்கிரஸ் கட்சியும் ஜெயலலிதாவை இந்த விழாவுக்கு அழைக்கவில்லை.

அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அரசிடம் இருந்து 2,000 அழைப்பிதழ்கள்வழங்கப்பட்டுள்ளன.

பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே அரசியல் மோதல் இருந்தாலும், வாஜ்பாய்- சோனியா காந்தி இடையே பரஸ்பரமரியாதையும் நல்லுறவும் நிலவி வருகிறது. அது போன்ற மரியாதை ஜெயலலிதாவுக்கும் சோனியாவுக்கும்இடையே இல்லை. பிரதமருக்கும் ஜெயலிலதாவுக்கும் இடையே நல்லுறவும் இல்லை.

இதனால் இந்த விழாவுக்கு ஜெயலலிதாவை அழைத்து சோனியா காந்தியை எரிச்சல்படுத்த வேண்டாம் என்றுபிரதமர் உத்தரவிட்டுவிட்டதாகத் தெரிகிறது. வழக்கமாக ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு அந்ததந்த மாநிலமுதல்வர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுவது வழக்கம்.

இந் நிலையில் மத்திய அரசே அழைத்தாலும் கூட சோனியா பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் நிச்சயம் பங்கேற்கமாட்டார் என்கிறது அதிமுக வட்டாரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+