தா.கி. கொலை வழக்கு: அழகிரியிடம் குற்றப் பத்திரிக்கை நகலை வழங்கியது நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரிடமும் இன்றுமதுரை நீதிமன்றம் குற்றப் பத்திரிக்கை நகலை வழங்கியது.

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அழகிரிஜாமீனில் உள்ளார். இந்த வழக்கு விசாரணை மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையின் நகல் இன்று 13 பேரிடமும்வழங்கப்பட்டது. இதற்காக அழகிரி உள்ளிட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அனைவருக்கும் 356 பக்ககங்கள் அடங்கிய குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. பின்னர் வழக்கைஇம்மாதம் 15ம் தேதிக்கு நீதிபதி வனிதா ஒத்திவைத்தார்.

குற்றப் பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டால் வழக்கு விசாரணையும் ஆரம்பித்துவிடும். இதனால், இதைஉடனடியாகப் பெறாமல் இருக்க அழகிரி உள்ளிட்டவர்கள் முயன்றனர். ஒருமுறை அழகிரி நீதிமன்றத்துக்குவரவில்லை. அடுத்த தடவை வழக்கில் கைதான 2 திமுகவினர் வரவில்லை.

இதனால் நகல் வழங்கும் பணி தாமதப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+