சுடுகாட்டில் குண்டு வெடிப்பு: ஈரோட்டில் பதற்றம்!
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வைரபாளையம் என்ற இடத்தில், சுடுகாட்டின் அருகே ஜெலட்டின் குச்சிகள்,டெட்டோனேட்டர்கள் வெடித்துச் சிதறின. இதில் அருகாமையில் இருந்த பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. 3கிலோ மீட்டர் தூரம் வரை பலத்த சப்தம் எழுந்ததால் மக்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் என்ற இடத்திற்கு அருகே உள்ளது வைரபாளையம். இங்குள்ள சுடுகாட்டைஒட்டிய குப்பை மேட்டில் நேற்று பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இந்த சப்தம் 3 கிலோமீட்டர் தூரம்வரை கேட்டது.
அச்சத்தில் உறைந்து போன பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தபோது, சுடுகாட்டின் சுற்றுச்சுவர் இடிந்து கிடந்தது,அத்தோடு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் 15 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டிருந்தது. சுற்றிலும் ஜெலட்டின் குச்சிகள்,டெட்டனேட்டர்கள் சிதறிக் கிடந்தன.
அருகில் உள்ள சில வீடுகளிலும் விரிசல் விழுந்தது.
போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தியபோது தான் வெடித்தவை டெட்டோனேட்டர்கள் மற்றும்ஜெலாட்டின் குச்சிகள் என்று தெரியவந்தது.
மேலும் அந்தப் பகுதி முழுக்க மேலும் டெட்டனேட்டர்களும், ஜெலட்டின் குச்சிகளும் புதைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து மோப்ப நாய்களுடன் வெடிகுண்டுநிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் பாலச்சந்திரன், காவல்துறைக் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், வருவாய் கோட்டஅதிகாரி கஜலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
வெடி மருந்து கடத்தல் கும்பல் தான் அதை தங்களிடம் மறைத்து வைக்க முடியாமல் குப்பை மேடு அருகே புதைத்துவைத்திருக்கலாம், குப்பை அள்ளியபோது அது மேலே வந்து, கடும் வெயில் காரணமாக வெடித்திருக்கலாம் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications