மருமகள் தந்த வரதட்சணை புகார்: மாமனார்- மாமியார் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தங்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் மருமகள் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுத்ததால், மாமனாரும்மாமியாரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மீது அவரது மருமகள் சங்கீதா செக்ஸ்கொடுமை மற்றும் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுத்தால் சேலத்தில் ஏற்பட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளநிலையில், அதே நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இங்கும் மாமனார், மாமியார் மீது புகார் கொடுத்த மருமகளின் பெயரும் சங்கீதா தான்.

சேலம் குகைசாமுண்டி தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் திருநாவுக்கரசு (வயது 60). இவரது மனைவிவெங்கடேஸ்வரி (வயதூ 53). திருநாவுக்கரசு முன்பு உதவி அரசு வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.

இவர்களது மகன் விக்னேஷ் (வயது 28). இவரும் வழக்கறிஞரே. சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர்வழக்கறிஞராக உள்ளார். இவருக்கும் சேலத்தைச் சேர்ந்த சங்கீதாவுக்கும் இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம்நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

இந் நிலையில் விக்னேசுக்கும் சங்கீதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படவே, சங்கீதா தனது தாய் வீட்டுக்குச்சென்றுவிட்டார்.

இந் நிலையில் ஒரு மாதத்துக்கு முன் சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் சங்கீதா ஒரு புகார் கொடுத்தார். அதில்,வரதட்சணை கேட்டு தன்னை கணவர் விக்னேஷ், மாமனார் திருநாவுக்கரசு, மாமியார் வெங்கடேஸ்வரி ஆகியோர்துன்புறுத்தியதாகக் கூறியிருந்தார்.

இதையடுத்து விக்னேஷ் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.

இந்த புகார் குறித்து சூரமங்கலம் போலீசார் திருநாவுக்கரசிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, தன்னையும்மனைவியையும் போலீசார் கைது செய்யலாம் என்று அஞசிய திருநாவுக்கரசு மனமுடைந்த நிலையில்காணப்பட்டார். இதைத் தொடர்ந்து இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர்.

திருநாவுக்கரசு நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி வெங்கடேஸ்வரிஉணவில் விஷம் கலந்து உண்டு தற்கொலை செய்து கொண்டார். தங்களது மறைவுக்குப் பின் செல்ல நாயானபாமரேனியனை கவனிக்க ஆள் இல்லாமல் போய்விடும் என்பதால் முதலில் அதற்கு விஷம் கொடுத்துக்கொன்றுள்ளனர் இந்தத் தம்பதி.

தாங்கள் எழுதி வைத்த கடிதத்தில், எங்களது மகன் விக்னேஷை வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ளசங்கீதாவின் பெற்றோர் கோரினர். ஆனால், அதை நாங்கள் ஏற்கவில்லை. இதனால் சங்கீதாவை பிரித்து வீட்டுக்குஅழைத்துச் சென்றனர். பின்னர் சங்கீதாவின் பெற்றோரும், சகோதரர்களும் சேர்ந்து எங்கள் மீது அபாண்டமாகவரதட்சணை புகார் கொடுத்துள்ளனர். இந்த வீண் பழியை சுமக்க வயோதிக காலத்தில் எங்களால் முடியாது.இதனால் இந்த தற்கொலை முடிவை நாடுகிறோம் என்று எழுதப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+