கண்ணப்பனை கண்டிக்கலாம், தண்டிக்க முடியாது: ப.சிதம்பரம்
காரைக்குடி:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படும் மத்திய அமைச்சர் கண்ணப்பனை கண்டிக்கலாமே தவிரதண்டிக்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவருமானப.சிதம்பரம் கூறினர்.
காரைக்குடியில் நடந்த தனது கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில்,
ஜெயலலிதாவின் இந்த இரண்டரை ஆண்டு கால சாதனைகள் என்ன?. எந்த ஊரிலாவது தொழிற்சாலைதொடங்கப்பட்டுள்ளதா?. ஒரு 3,000 பேருக்காவது வேலை தந்திருப்பார்களா?. 20 படுக்கையாவது கொண்ட ஒருபுதிய மருத்துவமனையாவது இந்த அரசால் எங்காவது ஆரம்பிக்கப்பட்டதா?
பக்கத்து மாநிலமான ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு சிறந்த முதல்வராக கொடி கட்டிப் பறக்கிறார். உள்நாட்டுமுதலீடு மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டையும் கொண்டு வந்து தொழில்களைப் பெருக்கி ஆயிரக்கணக்கானபடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.
இங்கே என்ன நடக்கிறது. பகட்டு, ஆடம்பரம், அலங்காரமும் தான் அரசியலாகிவிட்டது. கற்பழிப்புகள், எதிர்க்கட்சி. கேள்வி கேட்கும் பத்திரிக்கைகள் மீது வழக்குகள் இது தான் ஜெயலலிதா அரசின் சாதனை. இப்போது பலிகொடுக்கத் தடையாம். விரைவில் மாமிசம் சாப்பிடவும் தடை வரலாம்.
மத்திய அமைச்சர் கண்ணப்பன் என்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் மத்திய அமைச்சர்ஒருவரை தண்டிக்க மாநில அரசுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது.
இதனால் அவரை தமிழக அரசால் கண்டிக்க மட்டுமே முடியும். அவரை தண்டிக்க எல்லாம் முடியாது.
சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை விரைவாக முடித்துஅவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications