பண்ணையார் சாவு: முழு விசாரணை வேண்டும்- கருணாநிதி
சென்னை:
தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேச பண்ணையாரின் போலீஸ் எண்கெளன்டர் சாவு குறித்து முழுமையானவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அவரதுகுடும்பத்தினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். பண்ணையாரை விசாரிக்கச் சென்றதாகவும், அப்போதுபண்ணையார் சுட்டதால், தாங்கள் திருப்பிச் சுட்டதாகவும் போலீஸ் தரப்பு கூறுவதை நம்ப அவர்கள் தயாராகஇல்லை.
அனுமதியில்லாமல் நிதி நிறுவனம் நடத்திய சமீர் என்பவர் தன்னை பண்ணையார் மிரட்டியதாக 9 நாள் கழித்துபோலீஸில் புகார் கொடுக்கிறார். அவர் புகார் கொடுத்த 3 நாட்களுக்குப் பிறகு பண்ணையாரை சுட்டுக் கொல்கிறதுபோலீஸ்.
சமீரே 9 நாட்கள் கழித்துப் புகார் கொடுத்தச நிலையில், 3 நாளில் எப்படி அதை விசாரித்தது போலீஸ்?.விசாரணையின்போது சுட்டுக் கொல்லும் அளவுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகள் எழுகின்றன.
என்கெளன்டர் என்ற பெயரில், சமீருக்கு ஆதரவாக போலீஸார் நடந்து கொண்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது.எதற்காகவோ கொன்று விட்டு, இப்போது அதற்கான காரணங்களைத் தேடுகிறது போலீஸ்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் அதிகாரம் மட்டுமே போலீஸாருக்கு உள்ளது. தண்டிக்கும் அதிகாரம்அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆளுபவர்கள் தரும் ஊக்கம் காரணமாகவே, சில காவல்துறை அதிகாரிகள்சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு இதுபோல செயல்படுகிறார்கள்.
நாடார் சமுதாயத்தினரும், பண்ணையாரின் குடும்பத்தினரும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றுகோரியுள்ளனர். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொல்லப்பட்ட பண்ணையார் நாடார் பாதுகாப்புப் பேரவை என்ற அமைப்பின் தலைவராக இருந்துள்ளார்,அத்தோடு, பல கோடி சொத்துக்களுக்கு அதிபராகவும் இருந்துள்ளார் என்பதால், அவரது கொலைக்கான பின்னணிகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அரசின் கடமை என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications