சென்னையில் தாறுமாறாக ஓடிய லாரி: ஒருவர் பலி, இருவர் படுகாயம்
சென்னை:
லாரி ஒன்று தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில்வந்த அரசு ஊழியர் பரிதாபமாக பலியானார்.
சென்னை நகரின் போக்குவரத்து அதிகமாக இருக்கும் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் இன்று காலை 9.30 மணியளவில் ஆந்திராவிலிருந்து வந்த ஒரு லாரி வேகமாக வந்தது.
லாரியின் வேகமே சரியில்லை என்று நினைத்த பொதுமக்கள் அதிரும் வகையில், திடீரென்று லாரி தாறுமாறாகஓடத் தொடங்கியது.
இதில் சாலையில் சென்று கொண்டிருந்த 5 இரு சக்கர வாகனங்களை இடித்துத் தள்ளிய லாரி, 3 வண்டிகளைஅப்படியே இழுத்துக் கொண்டு பிளாட்பாரத்தில் மோதி நின்றது.
இதில் அரசு ஊழியரான சங்கர் என்பவர் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கிக் கொண்டு சம்பவ இடத்திலேயேபரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் லாரிக்கடியில் சிக்கியிருந்தனர்.
தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து லாரிக்கடியில் சிக்கியவர்களைமீட்க முயன்றனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி, சங்கரின் உடலை மீட்டனர்.
மற்ற இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சங்கர் தடய அறிவியல் பிரிவில் பணியாற்றிவந்தவர்.
நகருக்குள் பகல் நேரங்களில் லாரியை ஓட்டக் கூடாது என்ற தடையை மீறி லாரியை ஓட்டி வந்த டிரைவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications