வைஷ்னவி தேவி கோவிலை போல திருவண்ணாமலை கோவிலை பரமாரிக்கத் திட்டம்: மத்திய அரசு
டெல்லி:
ஜம்மூ- காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவியைப் போலவே திருவண்ணாமலை கோவிலையும் பராமரிக்கவிரைவில் புதிய திட்டம் தீட்டப்படும் என உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு இன்று விளக்கம் அளித்தது.
இந்தக் கோவிலை யார் பராமரிப்பது என்பது குறித்து தமிழக இந்து அறநிலையத்துறையைச் சேர்ந்த கோவில்நிர்வாகத்திற்கும் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறைக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.
கோவிலை நூற்றாண்டுகளாக கோவில் நிர்வாகமே பராமரித்து வருகிறது. இந் நிலையில் கோவிலை தனதுகட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதாக தொல்பொருள் ஆராய்ச்சித்துறை அறிவித்தது.
இதற்கு கோவில் நிர்வாகிகளும் பொது மக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதை எதிர்த்துதிருண்ணாமலையில் பந்த் நடந்தது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிர்வாகத்தினர் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்தநீதிமன்றம் தொல்பொருள் ஆய்வுத்துறையின் உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து தொல்பொருள் துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி சபர்வால், நீதிபதி அகர்வால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய தொல்பொருள் துறையின் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அல்தாப் அகமத்பேசுகையில், ஜம்மூ- காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவியைப் போலவே திருவண்ணாமலைகோவிலையும் சிறப்பாகப் பராமரிக்க விரைவில் புதிய திட்டம் தீட்டப்படும் எனறார்.
இதையடுத்து அந்த புதிய திட்ட விவரத்தை 6 வார காலத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றுநீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும்அனுமதிக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மாவட்ட கலெக்டர் தீவிரமாக அமலாக்கி கண்காணிக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications